Wednesday, October 28, 2026

லியோ படம் பிளாப் ஆக முக்கிய காரணமே இது தான் !எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய அதிர்ச்சி உண்மை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விமல் நடிப்பில் எழில் இயக்கும் தேசிங்கு ராஜா 2 படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னணி இயக்குநரும் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசிய பேச்சில், லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் ஆகியோரை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் குறித்து பேசிய அவர், “சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். முதல் பாதி அருமையாக இருந்தது. அதைப் பற்றி இயக்குநருக்கு போன் செய்து பாராட்டினேன். இரண்டாம் பாதி அவ்வளவு சிறப்பாக இல்லை என்று சொன்னேன். உடனே அந்த இயக்குநர் என்னிடம் பேச விரும்பவில்லை.

ADVERTISEMENT

ஒரு தகப்பனே தவறான மத நம்பிக்கையால் தனது பிள்ளையை அப்படியெல்லாம் பலி கொடுக்க விரும்ப மாட்டான் என்று சொன்னேன். உடனே அந்த இயக்குநர் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் சார் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டார். இதுவரை திரும்ப கூப்பிடவே இல்லை. நான் சொன்ன அந்த சீனை ரசிகர்களே வச்சு செய்தார்கள்” என்று கூறினார்.

இந்த பேச்சு லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” படத்தை குறித்ததாக ரசிகர்கள் கருதுகின்றனர். அந்தப் படத்தில், கதாநாயகனின் தந்தை தவறான மத நம்பிக்கையால் தனது மகனை பலி கொடுக்க முயற்சிப்பதாக ஒரு காட்சி உள்ளது. இந்த காட்சியை பலரும் விமர்சித்தனர்.

விஜய் குறித்து பேசிய அவர், “துள்ளாத மனம் துள்ளும் படம் விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம். அந்தப் படத்தின் கதையை கேட்டதுமே விஜய்யின் கால்ஷீட் கொடுத்துவிட்டேன். அந்தளவுக்கு திரைக்கதை நன்றாக இருந்தது. அப்போது விஜய் என்ன சூப்பர் ஸ்டார் நடிகரா… அதெல்லாம் கிடையாது.

அந்தப் படத்தின் கதையும் திரைக்கதையும் தான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஓபனாக சொல்ல வேண்டும் என்றால் துள்ளாத மனம் துள்ளும் படத்தில் விஜய் நடிக்காமல் வேறு எந்த ஹீரோ நடித்திருந்தாலும் சூப்பர் ஹிட்டாகிருக்கும். அதுதான் ஒரு படத்தின் உண்மையான வெற்றி” என்று கூறினார்.

இந்த பேச்சு விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விஜய்யின் அப்பா SAC-யே இவ்வளவு ஓபனாக பேசியது அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT