Wednesday, October 28, 2026

லியோ படத்தால் லோகேஷ் கனகராஜ் மீது பாய்ந்த வழக்கு ! ரசிகர்கள் அதிர்ச்சி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் விஜயின் லியோ படத்தில் வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ராஜமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், லியோ படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் உள்ளதோடு பெரும்பாலும் ஆயுத கலாச்சாரம் காட்டப்பட்டுள்ளது. மேலும் மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி அதன்தொடர்பான முரண்பாடான கருத்துக்களும், எதிரிகளை பழி வாங்குவதற்கு பெண்கள், குழந்தைகளை கொல்ல வேண்டும். போதை பொருள் பயன்படுத்துதல், மனிதர்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட இளம் சிறார்களை பாதிக்கக்கூடிய பார்க்கத் தகாத காட்சிகளை லோகேஷ் கனகராஜ் படமாக்கி இருக்கிறார்.

ADVERTISEMENT

மேலும் கலவரம், சட்டவிரோத செயல்கள், போதை பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், அதிகாரத்தை அச்சுறுத்துவது, காவல்துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் போன்ற சமூக விரோதமான கருத்துக்களை தவறான வழிகாட்டுதல்களை தனது திரைப்படத்தின் மூலம் காண்பித்திருக்கிறார். இது இளம் சிறார்களை, இளைய சமுதாயத்தை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும்.

இது போன்ற படங்களை தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு முறையாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும். லோகேஷ் கனகராஜ் மற்றும் லியோ திரைப்பட குழுவினர் மீது வன்முறையை தூண்டும் வகையில் திரைப்படமாக்கியதற்கு இந்திய குற்றவியல் தண்டனை சட்டங்களில் படி வழக்கு பதிவு செய்து இந்த ‘லியோ’ படத்திற்கு முழுமையாக எந்த தளத்திலுமே காண்பிக்கப்படாத வகையில் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. எனவே வழக்கு விசாரணை ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். அடுத்த வாரங்களில் இந்த வழக்கில் இது குறித்த உத்தரவு ஏதேனும் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்படும்.

லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க வாய்ப்பு உள்ளது. அதில் என்ன மாதிரியான கருத்துக்களை லோகேஷ் கனகராஜ் சொல்ல வருகிறார் என தெரியவரும்.

லியோ படத்தில் வன்முறை காட்சிகள் இருந்ததாக கூறி இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருப்பது, சமூகத்தின் ஒரு பகுதியினர் எழுப்பியுள்ள கவலைகளை பிரதிபலிக்கிறது. வன்முறையை ஆதரிக்கும் வகையில் படங்கள் எடுக்கப்படுவது, இளம் சிறார்களை பாதிக்கக்கூடிய அபாயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தணிக்கை துறை வன்முறை காட்சிகள் உள்ள படங்களை முறையாக ஆய்வு செய்து, அவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT