Wednesday, October 28, 2026

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த படத்தில் துருவ் விக்ரம் ஒரு கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் தீவிரமான கபடி பயிற்சியும் மேற்கொண்டார்.

ADVERTISEMENT

கர்ணன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால், அவர் மாமன்னன் படத்தில் கமிட் ஆனதால், துருவ் விக்ரம் படம் தள்ளிவைக்கப்பட்டது.

மாமன்னன் படத்தை முடித்த மாரி செல்வராஜ் தற்போது தான் தயாரித்து இயக்கும் ‘வாழை’ படத்தின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

‘வாழை’ படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், ஜூன் மாதத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகான் படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகளாக துருவ் விக்ரம் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாரி செல்வராஜின் தனித்துவமான கதை சொல்லும் பாணியும், துருவ் விக்ரமின் நடிப்பு திறமையும் இணைந்து இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என நம்பலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT