Wednesday, October 28, 2026

ஆட்டமே இனிமேல் தான் மங்காத்தா 2 படத்தை பற்றி முக்கிய தகவலை கூறிய முக்கிய பிரபலம் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடிக்கிறார், த்ரிஷா, சஞ்சய் தத், அருண் விஜய், அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொள்ளவுள்ளார்.

அஜித்தின் 50வது படத்தை பெரிய அளவில் ஹிட்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம்தான் மங்காத்தா. நினைத்த மாதிரியே அஜித்தின் கெரியரில் மங்காத்தா திரைப்படம் பெரிய மைல் கல்லாக அமைந்தது.

ADVERTISEMENT

பில்லா படத்திற்கு பிறகு மங்காத்தா படத்தில் அஜித்தின் கிரேஷ் இன்னும் அதிகமாகி கொண்டே போனது. BGM ஆகட்டும் அவருடைய ஸ்டைல் ஆகட்டும் ரசிகர்களை பரவசப்படுத்தியது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் படம் மாபெரும் வெற்றி பெற்றது.வாலி படத்திற்கு பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் படம் முழுக்க கலக்கியிருப்பார் அஜித். வில்லன் அஜித்தையும் ரசிகர்கள் ரசிக்க தொடங்கினார்கள். படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த நிலையில் சில காலமாக மங்காத்தா 2 பற்றிய அப்டேட் இணையத்தில் பரவத் தொடங்கியது. வெங்கட் பிரபுவும் மங்காத்தா 2 வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை போல சில மேடைகளில் கூறியிருந்தார்.இதற்கிடையில் மங்காத்தா படத்தில் நடித்த வைபவ் சமீபத்தில் ஒரு பேட்டியில் மங்காத்தா 2 படத்தை பற்றி சில தகவல்களை கூறினார். அதாவது மங்காத்தா 2 பற்றி அவ்வப்போது வெங்கட் பிரபுவிடம் கேட்பதுண்டு.

ஆனால் அஜித் சார் தரப்பில் இருந்து வெங்கட் பிரபுவை இதுவரை அழைக்கவில்லை. அதனால்தான் அப்படியே அமைதியாக இருக்கிறார் வெங்கட் பிரபு. இருந்தாலும் நான் அடிக்கடி மங்காத்தா 2 பற்றி பேசியிருக்கிறேன் என வைபவ் கூறினார்,தற்போது வெங்கட் பிரபு விஜயை வைத்து கோட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். கோட் படத்திலும் வைபவ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கூடவே பிரேம்ஜியும் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசை.

70 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படம் ஒரு ரோட்-ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் குமார் ஸ்டைலான சேஸிங் சீக்வென்ஸில் நடிப்பதாக கூறப்படுகிறது. முழுப் படப்பிடிப்பையும் 2024 மார்ச்க்குகள் இறுதிக்குள் முடித்து, தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT