Wednesday, October 28, 2026

மார்க் சக்கர்பெர்க் புதிய தொழிலில் களமிறக்கம்: உயர்தர மாட்டு இறைச்சி தயாரிப்பு

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க், பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில், ஹவாயில் உள்ள கவாய் தீவின் பாதியை தனக்கு சொந்தமாக வாங்கிய அவர், அங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பண்ணை ஒன்றை அமைத்து வருகிறார். இந்த பண்ணையில் மாடு வளர்ப்பு தொழிலைத் தொடங்கியுள்ளார்.

மாடுகளுக்கு பொதுவாக சோளம், புற்கள் மற்றும் தீவணம் போன்ற உணவுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், மார்க் சக்கர்பெர்க் தனது பண்ணையில் உள்ள மாடுகளுக்கு உலர் கொட்டைகள், உள்ளூரில் தயாரிக்கப்படும் பீர் ஆகியவற்றையும் கொடுத்து வளர்த்து வருகிறார். இதன் மூலம், உயர்தரமான மாட்டிறைச்சியை உருவாக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

ADVERTISEMENT

“உயர்தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது இலக்கு. அதற்காக எனது பண்ணையில் வளர்க்கும் மாடுகளுக்கு மக்காடமியா கொட்டைகள் மற்றும் பீர் போன்றவை உணவாக கொடுக்கிறோம். இதன்மூலம், தரமான இறைச்சியை தயாரிக்கலாம். இந்த பீர் மற்றும் மக்காடமியா கொட்டைகளும் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக பல ஏக்கர் பரப்பளவில் மக்காடமியா மரங்கள் வளர்க்கப்படுகின்றன” என்று மார்க் சக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய தொழில் மார்க் சக்கர்பெர்க்கிற்கு வெற்றிபெறுமா என்பது எதிர்காலத்தில் தெரியவரும். ஆனால், அவரது இந்த முயற்சிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT