Wednesday, October 28, 2026

‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் பார்ட் 2 பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

மறைந்த இயக்குனர் ராசு மதுரவன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான குடும்ப சண்டையும், பங்காளி பகையும் ஒரு கட்டத்தில் அன்பால் இணைவது மாதிரியான கதையம்சம் கொண்ட இந்த படம், சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதில் இரண்டாம் பரிசையும் பெற்றது.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் 2ம் பாகத்தையும் தயாரிக்க உள்ளது. கதை, திரைக்கதை வசனம் எழுதி கே.பி.ஜெகன் படத்தை இயக்க உள்ளார். முதல் பாகத்தில் நடித்த நடிகர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளனர்.

ADVERTISEMENT

முதல் பாகத்தில் மணிவண்ணன் குடும்பத்தின் தலைவர் மாயாண்டியாக நடித்திருந்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை. அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் ராஜ்கிரணை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர்.

இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT