Wednesday, October 28, 2026

மயங்க் அகர்வாலுக்கு உடல்நலக் குறைவு தற்போதைய நிலை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அபார வெற்றி! ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்!

டெல்லியில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி...

ச்சே என்ன மனுஷன்யா அஜித்தை நேரில் சந்தித்து மிரண்ட சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் போட்ட பதிவு வைரல்

நடிகர் அஜித்திற்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை...

ஹர்திக் பாண்டியா மீது ஸ்டெயின் ஆவேசம்: மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச வேண்டும்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான்...
ADVERTISEMENT

கர்நாடக அணியின் கேப்டன் மயங்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் விமானத்தில் புதுதில்லி செல்லும்போது இரண்டு முறை வாந்தி எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் திரிபுராவின் அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மயங்க் அகர்வாலுக்கு என்ன பிரச்சனை என்று சரியாக தெரியவில்லை. ஆனால், அவர் ஆபத்துக் கட்டத்தை தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவர் தற்போது பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார்.

ADVERTISEMENT

ரஞ்சி கோப்பையில் 2 சதங்கள், 1 அரைசதம் என அசத்தி வருகிறார் மயங்க் அகர்வால். அவரது உடல்நலக் குறைவு கர்நாடக அணியின் ரஞ்சி கோப்பை சாம்பியன்ஷிப் வாய்ப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மயங்க் அகர்வால் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு

“நான் தற்போது நன்றாக இருக்கிறேன். கம்பேக் கொடுக்க தயாராகி வருகிறேன். உங்களது அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி” என்று மயங்க் அகர்வால் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயங்க் அகர்வால் விரைவில் முழுமையாக குணமடைந்து விளையாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT