Wednesday, October 28, 2026

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஜடேஜா: ரசிகர்களை குழப்பும் புகைப்படம்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படம் எதற்காக எடுக்கப்பட்டது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஐபிஎல் தொடர்:

ADVERTISEMENT

சமீபத்தில் தொடங்கிய ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் பெங்களூரு அணியை சிஎஸ்கே அணி வீழ்த்தியது. அடுத்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக சிஎஸ்கே மோத இருக்கும் நிலையில், தற்போது சிஎஸ்கே அணி சென்னையில் தங்கி உள்ளது.

அனிருத் மற்றும் ஜடேஜா:

இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜடேஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் எதற்காக எடுக்கப்பட்டது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சஸ்பென்ஸ்:

சென்னை அணிக்கான சிறப்பு பாடலை அனிருத் இசையமைக்க இருக்கிறாரா? அல்லது அனிருத் மற்றும் ஜடேஜா இருவரும் சேர்ந்து ஏதாவது விளம்பர போட்டோஷூட் நடக்கிறதா? என்பது சீக்கிரம் தெரிந்துவிடும் என்றாலும், இப்போதைக்கு அனிருத் இதனை சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளார்.

ரசிகர்களின் கருத்து:

எதுவாக இருந்தாலும், அனிருத் மற்றும் ஜடேஜா இணைந்தால் அது சூப்பராவே இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT