நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் போட்டி இன்று நியூசிலாந்தின் ஈடன் பார்க் ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதல் ஓவரின் 2வது பந்திலேயே டெவான் கான்வேவை டக் அவுட்டில் வீழ்த்திய ஷாகீன் அப்ரிடி தொடக்கத்தில் நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளினார். ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பின் ஆலன் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆலன் 35 ரன்கள் அடித்து வெளியேற, வில்லியம்சன் 63 ரன்கள் அடித்து வெளியேறினார். அதற்குபிறகு களமிறங்கிய டேரில் மிட்செல் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றினார். 4 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் விளாசி 27 பந்தில் 61 ரன்கள் குவித்தார். இறுதியாக களமிறங்கிய சாப்மன் 2 சிக்சர் 2 பவுண்டரிகளை பறக்கவிட, 20 ஓவர் முடிவில் 226 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.
227 என்ற இமாலய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய சைம் ஆயுப் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் 2 ஓவரிலேயே 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என பறக்கவிட்ட இந்த ஜோடி மிரட்டிவிட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக ஆயுப் ரன் அவுட்டாகி வெளியேற, அதற்கு பிறகு கைக்கோர்த்த ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் கலக்கிப்போட்டனர்.
அடுத்தடுத்து சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிய இந்த ஜோடி 5 ஓவரில் 60 ரன்களை குவித்து அசத்தியது. ஆனால் 25 ரன்னில் ரிஸ்வானை வெளியேற்றிய டிம் சவுத்தீ முக்கியமான விக்கெட்டை எடுத்துவந்தார். என்ன தான் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஒருபுறம் செம்ம டச்சில் ஜொலித்த பாபர் அசாமை, நியூசிலாந்து பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே எதிர்முனையில் இருந்த வீரர்களை குறிவைத்த நியூசிலாந்து பவுலர்கள், பெரிய பார்ட்னர்ஷிப்க்கு வழிவிடாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டே இருந்தனர். கடைசிவரை நிலைத்து நின்று ஆடிய பாபர் அசாம் 63 ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சரியாக ஆடாததால் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 226 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் தொடரை 1-0 என முன்னிலை வகிக்கிறது நியூசிலாந்து அணி.
நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்:
டேரில் மிட்செல் மற்றும் கேன் வில்லியம்சனின் அதிரடியான ஆட்டம்
நியூசிலாந்து பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சு
பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்கள்:
ஆரம்பத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழத்தல்
மற்ற வீரர்களின் சொதப்பல்
