Wednesday, October 28, 2026

சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருது

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவிக்கு, குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதியையொட்டி அறிவிக்கப்பட உள்ள மத்திய அரசின் விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள திரைப்படக் கல்லூரியில் பயின்ற சிரஞ்சீவி, பின்னர் தெலுங்குத் திரையுலகத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அவர், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தார்.

ADVERTISEMENT

1983ஆம் ஆண்டு, “ராணுவ வீரன்” படத்தில் வில்லனாக நடித்து தமிழ்த் திரையுலகிலும் அறிமுகமானார். அதன் பிறகு, “47 நாட்கள்” படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

1983ஆம் ஆண்டு, “பிரஜா ராஜ்ஜியம்” என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். பின்னர், அந்தக் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

தீவிர அரசியலிலிருந்து விலகி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சிரஞ்சீவி, தற்போதும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சிரஞ்சீவியின் திரையுலகப் பங்களிப்பு மற்றும் சமூக சேவையை பாராட்டி, அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு, 2006ஆம் ஆண்டில், சிரஞ்சீவிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT