Wednesday, October 28, 2026

பிரபல குணச்சித்திர நடிகர் அருள்மணி நேற்று மாலை திடீர் மாரடைப்பால் காலமானார்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

பிரபல குணச்சித்திர நடிகர் அருள்மணி நேற்று மாலை திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65.

மக்களவைத் தேர்தலில் அதிமுக பரப்புரைக்காக கடந்த 10 நாட்களாக சுற்றுப்பயணத்தில் இருந்து வந்த அவர், நேற்று மாலை சென்னைக்கு வந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் 90க்கும் மேற்பட்ட படங்களில் அருள்மணி நடித்துள்ளார். தங்கர் பச்சானின் “அழகி” படம் அருள்மணிக்கு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தென்றல், வேல், மருதமலை, கற்றது தமிழ், வன யுத்தம், சிங்கம் 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வேல் படத்தில் கலாபவன் மணிக்கு அடுத்தபடியாக வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

நடிப்பு மட்டுமின்றி, அருள்மணி சென்னையில் ஒரு நடிப்பு மற்றும் இயக்குனர் பயிற்சி பள்ளியையும் நடத்தி வந்தார்.

சமீப காலமாக திரை பிரபலங்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

அருள்மணியின் மறைவு தமிழ் சினிமாத்துறைக்கு பேரிழப்பாகும். அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்திக்கிறோம்.

இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT