Tuesday, February 24, 2026

சிஎஸ்கே அணிக்கு சிக்கல்! முஷ்டாஃபிசுர் ரஹ்மான் விளையாட வாய்ப்பில்லை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அபார வெற்றி! ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்!

டெல்லியில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி...

ச்சே என்ன மனுஷன்யா அஜித்தை நேரில் சந்தித்து மிரண்ட சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் போட்ட பதிவு வைரல்

நடிகர் அஜித்திற்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை...

ஹர்திக் பாண்டியா மீது ஸ்டெயின் ஆவேசம்: மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச வேண்டும்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான்...
ADVERTISEMENT

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணிக்கு, ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான முஷ்டாஃபிசுர் ரஹ்மான் திடீரென வங்கதேசத்திற்கு திரும்பியுள்ளதால், அவர் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

டி20 உலகக்கோப்பைக்கான விசா:

ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான விசா நடவடிக்கைகளுக்காக முஷ்டாஃபிசுர் ரஹ்மான் வங்கதேசத்திற்கு திரும்பியுள்ளார்.

அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு விசா கிடைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதால், வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் விசாவுக்கான முன்னேற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன.

சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு:

3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை வென்றுள்ள முஷ்டாஃபிசுர் ரஹ்மான் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக அமையும்.

அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அல்லது மொயின் அலி இருவரில் ஒருவர் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முஷ்டாஃபிசுர் ரஹ்மான் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கவலை:

முஷ்டாஃபிசுர் ரஹ்மான் இல்லாதது சிஎஸ்கே அணியின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் என்று ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அவர் விரைவில் விசா பெற்று அணிக்கு திரும்புவார் என்று நம்புவதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT