Tuesday, February 24, 2026

தலைவர் 171 படத்தின் கதை இதுவா ? வைரலாகும் தகவல்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

வேட்டையன்:

ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில்.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி மீண்டும் ஒரு ஹிட்டை கொடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே நிலவுகிறது.
அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் படத்தில் நடித்துள்ளனர்.
போலி என்கவுண்டரை பற்றிய கதைக்களம், ரஜினியின் மாஸ் காட்சிகள், அனிருத்தின் இசை என படம் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர் 171:

ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஜூன் மாதம் தொடங்கும் படப்பிடிப்பு, இந்திய அளவில் பேசும்படியாக பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் யூத் தோற்றம், தங்க கடிகார விலங்கு, சுவர் கடிகாரம் என போஸ்டரில் உள்ள மர்ம கூறுகள் ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளன.
மாநாடு படத்தின் டைம் லூப் கான்செப்ட், டைம் ட்ராவல் ஜானர் அல்லது ரோலக்ஸ் கேரக்டரின் ப்ரிக்வூல் என படத்தின் கதை குறித்து பல யூகங்கள் எழுந்துள்ளன.

வேட்டையன் மற்றும் தலைவர் 171 என இரண்டு படங்களிலும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு விருந்தளிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
2024 ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் என்பதை உறுதியாக கூறலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT