ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா திருமணம்: காமெடி நடிகர் பின்னணி
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சின்னத்திரை நடிகை சங்கீதாவை மைசூரியில் நேற்று (11 டிசம்பர் 2023) திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
ரெடின் கிங்ஸ்லி, நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து டாக்டர், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், கட்டா குஸ்தி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், ஜெயிலர், கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே பிசினஸ்ல இருந்தவர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
ரெடின் கிங்ஸ்லி, ஸ்பெல்போன் என்ற மிகப்பெரிய ஈவன்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியை வைத்துள்ளார். பொருட்காட்சி, கண்காட்சிகளில் இடம்பெறும் பெரிய ஜெயண்ட் வீல்ஸ், கிட்ஸ் விளையாடும் செட் அப்புகள் என எல்லாமே இவரது கம்பெனியின் வேலை.
அரசு நடத்தும் அனைத்துப் பொருட்காட்சிகளையும் இவரது கம்பெனி தான் நடத்திக் கொடுக்கிறது. பெசன்ட் நகர் பீச்சில் நடக்கும் கண்காட்சி, பொருட்காட்சியை நடத்துவதும் இவரது கம்பெனி தான்.
பிசினஸ் வட்டத்துக்குள் இவரோட பேரு ரெடின் தானாம். அங்கு ரொம்பவே பர்பெக்டா நடந்து கொள்வாராம்.
ரெடின் கிங்ஸ்லி ஒரு டான்சராகத் தான் சினிமாவுக்குள் நுழைந்தார். அவள் வருவாளா படத்தில் இடம்பெறும் ருக்கு ருக்கு ருக்குமணி என்ற பாடலில் இவர் குரூப் டான்சர்களில் ஒருவராக வருவார்.
ஸ்பெல் போன் டான்ஸ் கம்பெனி, ஸ்கூல் என ஆரம்பித்து தன் வட்டத்தை விரிவாக்கியுள்ளாராம். பல வருடங்களாக இந்த பிசினஸ்சில் இருக்கிறாராம். எக்ஸ்பிரஸ் அவென்யுவில் பண்டிகைக்காலங்களில் இவர் தான் பிரம்மாண்டமான செட் எல்லாம் போடுவாராம்.
திருமண பந்தத்தில் உடன்பாடு இல்லாமல் இருந்ததால் 46வது வயது வரை திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தாராம். நண்பர்கள் எல்லாம் டைரக்ட்டா 60ம் கல்யாணம் தானா என்றெல்லாம் கலாய்த்துள்ளனர். அதன்பிறகு திடீர் என காதல் வந்ததால் தான் திருமணம் செய்து கொண்டாராம்.
இந்த திருமணத்திற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
