மொகாலி: டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாட உள்ளனர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டியில் 14 மாதங்களுக்குப் பிறகு களமிறங்க உள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ரோகித் மற்றும் கோலியின் இருப்பு அணிக்கு நிறைய உறுதியைத் தரும் என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில், “அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை மைதானங்களை பார்த்தால் அங்கு விக்கெட் சற்று தந்திரமாக இருக்கும். அங்கு ரோகித் மற்றும் கோலியின் அனுபவம் இந்தியாவுக்கு தேவைப்படும். அதிலும் டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை எடுக்க உள்ளார் கோலி.
எனவே, இவர்களின் இருப்பு இந்திய அணியின் பேட்டிங்கை நிச்சயம் உயர்த்தும். மேலும் நிச்சயமாக டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான இந்தியாவின் வாய்ப்புகளை அதிகரிக்கும். ஒருநாள் உலகக் கோப்பையில் இருவரின் ஃபார்மும் மிகவும் நன்றாக இருந்தது. கோலி 3-வது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள சவாலான ஆடுகளங்களில் கோலியின் அனுபவம் கைகொடுக்கும்” என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் இருப்பு மிகவும் முக்கியமானது. இவர்கள் இருவரும் சிறந்த திறமைசாலிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கடந்த சில மாதங்களாக இவர்கள் இருவரும் டி20 போட்டிகளில் சிறப்பான ஃபார்மில் இல்லை. எனவே, ஆப்கானிஸ்தான் தொடரில் இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டால், அது அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும். மேலும், டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
