பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி கடந்த மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியான சலார் திரைப்படம், இன்று நள்ளிரவு முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய சலார், திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடியில் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் மட்டுமே ஓடிடியில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதனால் சலார் படத்தை தியேட்டரில் பார்க்க தவறிய ரசிகர்கள், ஓடிடியில் காண ரெடியாகிவிட்டனர். பொங்கல் விடுமுறை முடிந்துவிட்டதால் இனி ஓடிடி தளங்கள் தான் ரசிகர்களின் ஹோம் தியேட்டர் ஆகிவிடும்.
அதன்படி நாளை முதல் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள சலார், ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் சலார் இந்தியில் மட்டும் ஏன் வெளியாகவில்லை என்பது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
