Sunday, February 22, 2026

சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி: மீண்டும் இணையுமா?லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் சிம்பு தற்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்திற்காக ரெடியாகி வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி குறித்த தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநாடு வெற்றிக்குப் பின்னர்…

ADVERTISEMENT

சிம்புவுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது சிம்பு பலமுறை ட்ராப் ஆனதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த வதந்திகளையெல்லாம் கடந்து மாநாடு வெற்றி பெற்றது.

முந்தைய முயற்சிகள்

மாநாடு படத்திற்கு முன்னதாக, சிம்புவின் படத்தை இயக்க வெற்றிமாறனை தான் தேர்ந்தெடுத்திருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

வெற்றிமாறன் சிம்புவுக்கு ஒரு கதை சொன்னதாகவும், ஆனால் அந்தக் கூட்டணி அப்போது இணைய முடியாமல் போய்விட்டதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு முன்பும், வடசென்னை படத்தில் சிம்புவை நடிக்க வைக்க வெற்றிமாறன் முயற்சி செய்திருந்தார். தனுஷின் கால்ஷீட் பிஸியாக இருந்ததால் சிம்புவை வைத்து இயக்கவிருந்தாராம் வெற்றிமாறன். ஆனால் அப்போதும் அந்தக் கூட்டணி இணைய முடியாமல் போனது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சுரேஷ் காமாட்சி சொன்ன இந்த தகவல் தற்போது சிம்பு ரசிகர்களிடம் தீயாக பரவி வருகிறது.

இனிவரும் நாட்களில் மீண்டும் சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி கண்டிப்பாக இணையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அப்படி சிம்பு, வெற்றிமாறன் கூட்டணி இணைந்தால், அந்தப் படம் தாறுமாறாக இருக்கும் எனவும், விரைவில் அது நடக்கும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT