Wednesday, October 28, 2026

2024 டி20 உலகக் கோப்பைக்காண அட்டவணை வெளியிடு !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அபார வெற்றி! ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்!

டெல்லியில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி...

ச்சே என்ன மனுஷன்யா அஜித்தை நேரில் சந்தித்து மிரண்ட சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் போட்ட பதிவு வைரல்

நடிகர் அஜித்திற்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை...

ஹர்திக் பாண்டியா மீது ஸ்டெயின் ஆவேசம்: மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச வேண்டும்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான்...
ADVERTISEMENT

2024 டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவில் மீண்டும் களமிறங்கும் இந்தியா

ஜூன் 1 முதல் 29 வரை நடைபெறும் தொடரில் 20 அணிகள் பங்கேற்பு

ADVERTISEMENT

பாகிஸ்தான், இந்தியா மோதலுக்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்

அமெரிக்கா, உகாண்டா, கனடா ஆகிய அணிகள் முதல் முறையாக பங்கேற்பு

இந்தியாவின் முதல் போட்டி ஜூன் 5 அன்று அயர்லாந்துக்கு எதிராக நியூயார்க்கில்

பாகிஸ்தானுடன் ஜூன் 9 அன்று நடைபெறும் போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 1 முதல் 29 வரை நடைபெறும் இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட முன்னணி அணிகள் அனைத்தும் பங்கேற்கும் இந்த தொடரில், குழு ஆட்டம், சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் சுற்று என மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறும்.

இந்திய அணி ஏ பிரிவில் பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகளுடன் இணைந்து உள்ளது. பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதும் போட்டி ஜூன் 9 அன்று நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்த ஆட்டம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மற்ற போட்டிகள்:

ஜூன் 5 – அயர்லாந்து (நியூயார்க்கில்)
ஜூன் 12 – அமெரிக்கா (நியூயார்க்கில்)
ஜூன் 15 – கனடா (புளோரிடாவில்)
2007ம் ஆண்டில் தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. அதற்குப் பின் ஒருமுறை கூட இந்தியா கோப்பையை வெல்லவில்லை. சென்ற முறையும் அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோற்றது.

இந்த முறையும் இந்தியா கோப்பையை வென்று ரசிகர்களின் ஆதங்கத்தை போக்குவதற்காக கடினமாக பயிற்சி செய்து வருகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT