இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை டர்பனில் நடைபெறுகிறது. இந்த நிலையில், 17 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
1. ரோகித் சர்மா (420 ரன்கள்)
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 17 போட்டிகளில் விளையாடி 420 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம், இரண்டு அரை சதம் அடங்கும். 2015 ஆம் ஆண்டு தர்மசாலாவில் 66 பந்துகளில் 106 ரன்கள் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ரோஹித் அடித்து இருந்தார்.
2. சுரேஷ் ரெய்னா (339 ரன்கள்)
நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா 12 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி 339 ரன்கள் குவித்துள்ளார். 2010 டி20 உலக கோப்பையில் இந்தியாவின் முதல் டி20 சதத்தை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தான் அடித்திருந்தார். அவர் 60 பந்துகளில் 101 சேர்த்தார்.
3. விராட் கோலி (318 ரன்கள்)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 318 ரன்கள் அடித்துள்ளார். சராசரியாக 35 என்ற அளவில் அடித்திருக்கிறார். 2014 டி20 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் கோலி 44 பந்துகளில் 72 ரன்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடித்தது இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாது.
4. ஷிகர் தவான் (203 ரன்கள்)
ஷிகர் தவான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 7 போட்டிகளில் விளையாடி 203 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரி 33 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 141 என்ற அளவில் இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு ஜோஹனஸ்பர்க்கில் நடைபெற்ற டி20 போட்டியில் ஷிகர் தவான் 39 பந்துகளில் 72 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
5. தினேஷ் கார்த்திக் (221 ரன்கள்)
தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 13 போட்டிகளில் விளையாடி 221 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இதில் சராசரி 31 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 144 ஆகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியா விளையாடிய முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்று இருந்தார்.
குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஐந்து வீரர்களுமே தற்போது நடைபெறும் டி20 தொடரில் இல்லை என்பது.
