தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு டிசம்பர் 31ம் தேதி அல்லது ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
முன்னதாக, இப்படத்திற்கு “GOAT- கோட்” என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த தலைப்பை அஜித் ரசிகர்கள் கிண்டலடித்து வந்தனர். இதையடுத்து, விஜய் ரசிகர்கள் இப்படத்திற்கு புதிய தலைப்புகளை பரிந்துரைத்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் உண்மையான தலைப்பு டிசம்பர் 31ம் தேதி அல்லது ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
