Wednesday, October 28, 2026

தளபதி 69 படத்தின் இயக்குனர் இவரா ? இறுதியில் நடந்த மாற்றம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் விஜய் தற்போது ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பிறகு அவர் தனது 69வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இது அவரது கடைசி திரைப்படம் என்பதால், அதை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

சமீபத்தில், தளபதி 69 படத்தை தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கப் போகிறார் என்ற தகவல் வைரலானது. இதற்கு பல ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ADVERTISEMENT

ஆனால், தற்போது கிடைத்த தகவலின்படி, தளபதி 69 படத்தை கண்டிப்பாக ஒரு தமிழ் இயக்குனர் தான் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, விஜய் இயக்குனர்கள் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரையும் சந்தித்து, அவர்களிடம் கதை கேட்டிருந்தார். சமீபத்தில், இருவரும் மீண்டும் விஜய்யை சந்தித்து ஒரு ஒன் லைனை கூறினார்களாம். அந்த லைன் விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதாம்.

எனவே, அந்த இரண்டு கதைகளையும் மெருகேற்றி தன்னிடம் கூற வேண்டும் என்று இரண்டு இயக்குனர்களிடம் விஜய் கூறி இருக்கிறாராம்.

இந்த இரண்டு இயக்குனர்களில், யார் சரியான கதையுடன் வருகிறார்களோ, அவர்களுடன் விஜய் படம் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 69 படத்தை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பது உறுதியான தகவல்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT