இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம், பார்த்திபன், பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
கோலார் தங்க வயல் கதைக்களம்:
இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
தள்ளிப்போன ரிலீஸ்:
சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை. ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை தேர்தலால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி:
படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், “தேர்தல் தேதி ஜூன் மாதம் வரை வைக்கப்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விரைவில் அறிவிப்போம். இரண்டு மாதங்களுக்குள் படம் ரிலீஸாகிவிடும்” எனக் கூறியுள்ளார்.
மே மாத ரிலீஸ் எதிர்பார்ப்பு:
அதனால் படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படமும் மே மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படும் நிலையில் இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
