Wednesday, October 28, 2026

பிக் பாஸ் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சிறுவர்கள் ! வைரலாகும் புகைப்படம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக ஆரம்பித்து, கடந்த 26-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் வெற்றி பெற்ற போட்டியாளர்களை வாழ்த்தி நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக விஜே அர்ச்சனா மக்களால் தெரிவு செய்யப்பட்டார். அதனை அடுத்து மணி, மாயா ஆகியோர் 2, 3 இடங்களை பிடித்தனர்.

ADVERTISEMENT

தற்போது வெற்றி பெற்ற நபர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சென்னை அருகே உள்ள ஒரு சிறுவர் இல்லத்தில் “வாழ்த்துக்கள் அர்ச்சனா, மணி, தினேஷ், கூல் சுரேஷ்” என எழுதி இருந்த கேக்கை கட் பண்ணி அவர்களுக்காக பிரார்த்தனை செய்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

சிறுவர் இல்லத்தை சேர்ந்த குழந்தைகள், வெற்றி பெற்ற போட்டியாளர்களின் போட்டோக்களை வைத்தபடி கேக்கை கட் செய்து, அவர்களுக்காக வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அவர்களின் வெற்றிக்கு பிரார்த்தனை செய்தனர்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இந்த சிறுவர் இல்ல குழந்தைகளின் செயலை பாராட்டி வருகின்றனர்.

வெற்றி பெற்ற போட்டியாளர்களும் இந்த சம்பவத்தை அறிந்து மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT