Tuesday, February 24, 2026

கேப்டன் நினைவஞ்சலியில் சைலண்டாக என்ட்ரி கொடுத்த அஜித் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது நடிகர் சங்க கடன்களை அடைத்ததில் பெரும் பங்காற்றியவர் மறைந்த நடிகர் விஜயகாந்த். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவும் பல நடிகர்கள், நடிகைகள் வரவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதன்பின் சிலர் அவரது நினைவிடத்திற்கும், வீட்டிற்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். சினிமா ரசிகர்களிடையே இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,இன்று ஜனவரி 19ம் தேதி சென்னை, காமராஜர் அரங்கில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அதன் தலைவர் நாசர் வீடியோ ஒன்றின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த இரங்கல் கூட்டத்தில் அனைத்து நடிகர்களும், நடிகைகளும் கலந்து கொள்வார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில், விஜயகாந்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தாமல், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் இருந்த சில நடிகர்கள், இந்த இரங்கல் கூட்டத்திலும் வராமல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடிகர்கள், விஜயகாந்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தாமல் இருந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சிலர், விஜயகாந்தின் அரசியல் நிலைப்பாடுகளுடன் உடன்படவில்லை. சிலர், அவருடன் ஏற்பட்ட முன்பின் பகைமை காரணமாக அஞ்சலி செலுத்தவில்லை. இன்னும் சிலர், நடிகர் சங்கத்தின் நிர்வாக மாற்றம் காரணமாக அஞ்சலி செலுத்தாமல் இருந்திருக்கலாம்.

இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நடிகர்களின் எண்ணிக்கை, விஜயகாந்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பின் அளவை வெளிப்படுத்தும்.நடிகர் அஜித் இதுவரையில் ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லை. குடும்பத்தினரிடம் போனில் இரங்கல் தெரிவித்ததாக தகவல் வெளியானது.எனவே அஜித் நாள் விஜயகாந்த் இரங்கல் கூட்டத்திற்கு அஜித் கண்டிப்பாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறதுநடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களாக இருந்த சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுதான் நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்க நிர்வாகத்தைக் கைப்பற்றியது. அதனால், சரத்குமார், ராதாரவி தங்கள் பகையை மறந்து வருவார்களா என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில முக்கிய நடிகர்கள் விஜயகாந்த் இறுதி நிகழ்விலும், சிலர் அவரது வீட்டிற்கும் சென்று அஞ்சலி செலுத்தியதால் இந்த இரங்கல் கூட்டத்தைத் தவிர்ப்பார்களா என்பதும் இன்று தெரியும். நடிகர் சங்கம் நடத்தும் எந்த நல்லது, கெட்டது நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் சிலர் ஒதுங்கியே இருப்பார்கள், அவர்கள் நாளை வருவார்களா ?.ஒரு மூத்த நடிகர், நடிகர் சங்க கடனை அடைத்த ஒரு தலைவர், மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட ஒரு நடிகரின் இரங்கல் கூட்டத்திற்கு எந்தவித வேறுபாடும் இல்லாமல் அனைத்து நடிகர்களும், நடிகைகளும் வந்து கலந்து கொண்டு இந்த இரங்கல் கூட்டத்திலாவது அஞ்சலி செலுத்துவார்களா ?.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT