Tuesday, February 24, 2026

சிம்புவுடன் திருமணமா வரலட்சுமி கூறிய அதிர்ச்சி உண்மை !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வரும் வரலட்சுமிக்கும், சிம்புவுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், வரலட்சுமியின் திருமணம் குறித்து அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்த வீடியோவில், “புதுமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்க விரும்புகிறேன். கன்னிராசி பட கதையை படித்தபோது ரொம்பவே பிடித்துவிட்டது. இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறினேன். காதல் மற்றும் திருமணத்தை பற்றிய படம்தான் கன்னிராசி. ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் யாரையும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை” என்று வரலட்சுமி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், திருமணம் மீதே நம்பிக்கை இல்லை என்று ஆணித்தரமாக கூறியவர் எப்படி சிம்புவை திருமணம் செய்துகொள்வார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருவேளை வரலட்சுமிக்கும் சிம்புவுக்கும் திருமணம் என்று பரவிய தகவல் வெறும் வதந்தியாக இருக்குமோ என்று கருதுகின்றனர்.

வரலட்சுமி மற்றும் சிம்பு இருவரும் தனித்தனியாக திருமணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே, இந்த தகவல் வதந்தியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT