Wednesday, October 28, 2026

விடாமுயற்சி படத்தில் அஜித்தை மிரட்ட போகும் வில்லன் பிரபலம் இவரா ? அப்போ அர்ஜுன் கதாபாத்திரம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்தில் பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் நிலையில் அர்ஜுன் வில்லனாக களமிறங்குகிறார். இவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் இரண்டாவது வில்லனாக ஆரவ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த மகிழ்ச்சிறுமேனியின் முந்தைய படமான கலக தலைவன் திரைப்படத்தில் ஆரவ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் விடாமுயற்சி படத்தில் அர்ஜூன் முக்கிய வில்லனாகவும் இவர் இரண்டாவது வில்லனாகவும் இருப்பார் எனக் கூறப்படுகிறது.

ஆரவ், விடாமுயற்சி படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், ஆரவின் நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் அஜர்பைஜானில் தொடங்கியது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT