லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அடுத்த கட்டமாக அஜித் நடிப்பில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. தற்போது அந்நாட்டில் படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.




இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடக்க உள்ளது. அனேகமாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது. வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் 5 பாடல்களையும் கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும், அதில் ஒரு பாடல் வேற லெவலில் வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘லால்சலாம்’ ரிலீஸ் முடிந்தவுடன் ‘விடாமுயற்சி’ படத்தின் தொடர்ச்சியாக வெளியிட லைக்கா நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.


விரைவில் வெளியாகும் ‘விடாமுயற்சி’அஜித்தின் ‘அணியார்’, ‘விசுவாசம்’, ‘நேர்கொண்ட பார்வை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து, அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவதால், அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


