Wednesday, October 28, 2026

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், பட்ஜெட் பிரச்சினை காரணமாக படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவதும் அஜர்பைஜானில் முடிக்கப்படும் என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிட்டதால், அஜர்பைஜானில் ஷூட்டிங் செய்வதை நிறுத்திவிட்டு, சென்னை அல்லது மும்பை பகுதியில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

இதுவே விடாமுயற்சி படத்தின் கடைசி ஷெட்யூல் ஷூட்டிங் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விரைவில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

விடாமுயற்சி படத்தில் அஜித்தின் ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும், அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

முன்னதாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்தப் படத்தில் இருந்து அவர் விலகியதால், மகிழ் திருமேனி இயக்குநராகப் பொறுப்பேற்றார். இதனால் படத்தின் ஷூட்டிங் தாமதமாகத் தொடங்கியது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT