லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகும் “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்தது. தற்போது அந்நாட்டில் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.


அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த படத்தில் அனிருத் இசையமைத்த ஐந்து பாடல்களும் தற்போது கம்போஸ் செய்யப்பட்டுவிட்டன. அதில் ஒரு பாடல் மிகவும் வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.


“லால்சலாம்” படத்தின் ரிலீஸுக்குப் பிறகு “விடாமுயற்சி” படத்தை வெளியிட லைக்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


“விடாமுயற்சி” படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. இந்த படத்தில் அஜித் மிகவும் மாறுபட்ட லுக்கில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அஜர்பைஜானில் உள்ள ஒரு சில இடங்களில் பனிப்பொழிவு கிடையாது என்பதால், படப்பிடிப்பை புதியதொரு இடத்தில் மாற்றியுள்ளனர். இந்த ஷெட்யூலில் அஜித்துடன் ஆரவ், ரெஜினா உட்பட சிலரது காம்பினேஷனில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.


சுப்ரீம் சுந்தரின் சீறிப் பாயும் ஸ்டண்ட்களும், பரபரப்பான சேஸிங் சீன்களும் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்திற்காக ஸ்லிம் ஆகியிருக்கிறார் அஜித். படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கிற்காக போட்டோஷூட்டும் நடத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.


“அறம்” படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தின் இசையமைப்பாளர் அனிருத், ஏற்கெனவே ஐந்து பாடல்களை கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார், அதில் “ஆலுமா டோலுமா” போல அதிரடி குத்துப்பாடலையும் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.


த்ரிஷா, இப்போது மலையாளத்தில் டொவினோ தாமஸின் ஜோடியாக “ஐடென்டிட்டி” என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைப் போல அர்ஜுன் தெலுங்கில் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்புக்கு இடையே “விடா முயற்சி”க்கும் சென்றுவருகிறார் அர்ஜுன்.


அஜித்தின் ரசிகர்கள் “விடாமுயற்சி” அப்டேட் கேட்டு வரும் சூழலில், அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர். அஜர்பைஜான் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஹைதராபாத்திலும் ஒரு ஷெட்யூல் நடக்கலாம் என்றும் சொல்கிறார்கள். பிப்ரவரியோடு படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏப்ரல் இறுதியில் படத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றனர்.


