Wednesday, October 28, 2026

ஓஹோ இது தான் விஷயமா விடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து தீடிரென சென்னை திரும்பிய திரிஷா !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வனுக்கு பிறகு, திரிஷாவின் ரேஞ்சே வேற லெவலில் மாறிவிட்டது. இடையில் சில தோல்வி படங்களால் இவருடைய மார்க்கெட் சரசரவென சரிந்தது. அந்த கேப்பில் புது வரவுகளின் எண்ணிக்கையும் கூடியது. ஆனால் இப்போது இளவரசி நிற்கக்கூட நேரமில்லாத அளவுக்கு பிசியாகிவிட்டார்.

ADVERTISEMENT

40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் இவருக்கு இப்போது அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது. அதன்படி சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் இவர் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இப்போது அஜித்துடன் விடாமுயற்சியிலும் இணைந்திருக்கிறார்.

சில மாதங்களாக பிரச்சனையில் சிக்கியிருந்த இப்படம் இப்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒட்டுமொத்த பட குழுவினரும் இப்போது அஜர்பைஜானில் டென்ட் போட்டுள்ளனர். ஆனால் திரிஷா மட்டும் இப்போது அவசரமாக சென்னைக்கு திரும்பி இருக்கிறார்.

இதற்கு காரணம் அவர் இப்போது மலையாளத்திலும் பிசியாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அதன்படி மோகன்லால் உடன் இணைந்திருக்கும் இவர் டோவினோ தாமஸ் ஜோடியாக identity படத்தில் நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க தான் திரிஷா சென்னைக்கு வந்திருக்கிறார்.

இந்த மாதம் முழுவதும் இந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டு மீண்டும் ஜனவரி மாதம் விடாமுயற்சி படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறாராம். இது தவிர கமல் மணிரத்தினம் கூட்டணியின் தக் லைஃப் படமும் இவர் கைவசம் இருக்கிறது.

இப்படி ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் காலில் சக்கரம் கட்டாத குறைவாக பறந்து கொண்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் இன்னும் சில டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இதன் மூலம் திரிஷா லேடி சூப்பர் ஸ்டாரை ஓரம் கட்டி இருக்கிறார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT