நடிகர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டு மகன்களின் திருமணம் குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, விஜயபிரபாகரனுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், அதற்காக பிரதமர் நரேந்திர மோடி தேதியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியது.
இந்தத் தகவல் குறித்து விஜய பிரபாகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில்,
“என்னை பற்றியும், தம்பி குறித்தும் இரண்டுவிதமான ரூமர் பரவியுள்ளது. அவங்க பேர் கிறிஸ்டினா சபீனா. எங்க நிறுவனத்தில் 10 வருஷமா ஒர்க் பண்றாங்க. அவங்க லைப் ரஷ்யாவுல இருக்கு. நாங்க எல்லாம் ஒண்ணா ஒர்க் பண்றோம். வெளியில போவோம். ஒண்ணா சாப்பிடுவோம். அதை பார்த்துட்டு தம்பிக்கும், கிறிஸ்டினாவுக்கும் லவ்வுக்கு கிளப்பி விட்டுட்டாங்க. அது உண்மை கிடையாது. அவங்க பிரண்டாதான் பழகுனாங்க.”
“அதே மாதிரி எனக்கு 3 வருஷத்துக்கு முன்னாடியே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், நான் கல்யாணத்துக்காக வெயிட் பண்றதாகவும் ஒரு புரளி இருக்குது. பெண் பார்க்க போனது உண்மைதான். ஆனால் நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கலை. ஆனால்,மோடி தேதிக்காக நாங்க வெயிட் பண்றோம். என் கல்யாணத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி வந்து எனக்கு தாலி எடுத்துக் கொடுக்கமுன்னு நாங்க வெயிட் பண்றதாகவும் வதந்தியை கிளப்பி விடறாங்க.”
“அப்படி எதுவுமே இல்லை. நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கலை. திருமணத்துக்காகவும் நான் வெயிட் பண்ணலை. என்னவாக இருந்தாலும் கேப்டன் ஊரை கூப்பிட்டு சொல்லிதான் எங்க கல்யாணத்தை பண்ணுவார். எல்லோருக்கும் சோறு போட்டுதான் எங்க கல்யாணத்தை நடத்துவார். அந்த போட்டோவுல அப்பா இருக்க மாட்டார். அது நிச்சயதார்த்தமும் இல்லை.”
இந்தப் பதிவில், விஜயபிரபாகரன் தனது திருமணம் குறித்த வதந்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், அவரது தம்பி சண்முகபாண்டியனும் கிறிஸ்டினா சபீனாவை காதலிப்பதாக கூறப்படும் வதந்தியும் பொய்யானது என்று கூறியுள்ளார்.
விஜய பிரபாகரனின் இந்தப் பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் அவரது திருமணத்தை விரைவில் நடத்திக் கொள்ள வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
