டிசம்பர் 29, 2023 அன்று நடிகர், அரசியல்வாதி விஜயகாந்த் காலமானார். அவரது இறுதி ஊர்வலம் டிசம்பர் 30, 2023 அன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கருட பகவான் வலம் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வின் மூலம் விஜயகாந்த் வைகுண்ட பிராப்தியை அடைந்திருப்பதாக நம்பப்படுகிறது.
பொதுவாக, கருடனை பெருமாளின் அம்சமாகவே பார்த்து வருகிறோம். அந்த வகையில், பெருமாளை சுமந்து செல்லும் கருடன் விஜயகாந்தியின் இறுதி ஊர்வலத்தில் வட்டமிட்டது அவரை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதற்கு தான் என்று பிரபல ஜோதிடர் பாலாறு சுவாமிகள் கூறியிருக்கிறார்கள்.
மேலும், இந்த கலியுகத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது அரிது என்றும் மிகப்பெரிய புண்ணிய ஆத்மாவாக இருப்பதாலும் அதிக அளவு அன்னதானமும் செய்திருப்பதால் தான் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதை அவர் கூறுகிறார்.
விஜயகாந்த் ஆரம்ப காலத்தில் இருந்தே குன்றத்தூர் முருகன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். அந்த பக்தியின் காரணத்தால் தான் அவர் செல்வாக்கோடு திகழ்ந்திருக்கிறார். அத்தோடு சொல் வாக்கும் கொண்டவர்.
உச்சகட்ட நட்சத்திரமாக திரையுலகில் ஜொலித்திருந்தாலும் அவர் தனது குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய அத்தனை விஷயங்களையும் விட்டு தராமல் ஒவ்வொரு முறையும் செய்ததினால் தான் இந்த அளவு வாழ்க்கையின் உச்சத்தை தொட்டு இருக்கிறார்.
இது வரை எந்த ஒரு கலைஞருக்கும் கிடைக்காத சிறப்பம்சம் விஜயகாந்துக்கு கிடைத்து உள்ளது. கிராமத்தில் இருந்து கேப்டன் இறப்பிற்கு அஞ்சலி செலுத்த சென்னையில் நோக்கி வந்தது மக்களுக்கும், இவருக்கும் இடையே உள்ள பிணைப்பை எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்திருந்தது.
அரசியல்வாதிகள் கூட அதிக அளவு வந்திருந்தார்கள். எனினும் திரைப்பட சங்கத்தை சார்ந்தவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே இருந்ததே என்பது சற்று வருத்தமான விஷயமாகத்தான் இருந்தது.
பலரையும் வாழ வைத்து திரை உலகில் ஜொலிக்க வைத்து அழகு பார்த்த நடிகர்கள் கூட விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கூட சிலர் கலந்து கொள்ள வரவில்லை.
சரி, நடந்து முடிந்ததை பேசி இனி பிரயோஜனம் இல்லை. ஆனால் நிச்சயமாக வைகுண்ட பிராப்தியை தான் விஜயகாந்த் கண்டிப்பாக அடைந்திருக்கிறார் என்பதை கருடன் வட்டமிட்ட நிகழ்வின் மூலம் நாம் ஊர்ஜிதப்படுத்தலாம்.
அது மட்டுமல்லாமல் மண்ணுலகில் தமிழகத்தை ஆள முடியாமல் இருந்திருந்தாலும், மக்கள் மனதை ஆட்சி செய்த விஜயகாந்த் விண்ணுலகில் தன்னுடைய ஆட்சியை செய்வார் என நினைக்கலாம்.
