Wednesday, October 28, 2026

மறைந்த விஜயகாந்துக்கு மோகன்லால், பவன் கல்யாண் புகழஞ்சலி !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர் விஜயகாந்த் இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு 78 வயது.

விஜயகாந்த் மறைவுக்கு தமிழ்த் திரையுலகம், அரசியல் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் ஆகியோர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மோகன்லால்

மலையாள நடிகர் மோகன்லால் தனது இரங்கல் செய்தியில், “சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்ளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாண்

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனது இரங்கல் செய்தியில், “புரட்சிக் கலைஞர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் என்பதை அறிந்து வேதனை அடைகிறேன். விஜயகாந்தின் படங்கள் தெலுங்கு ரசிகர்களாலும் விரும்பப்படுகிறது. 2005ல் விஜயகாந்த் கட்சியை அறிவித்த நாளில், மதுரையில் படப்பிடிப்பில் இருந்தேன். அங்குள்ள மக்கள் புரட்சியை, சந்தோஷத்தை நேரடியாக பார்த்தேன்.

சூழல்களுக்கு எதிராக சிங்கம் போல நின்றவர் விஜயகாந்த். சினிமாவில் உள்ள சிலரால் அவமானங்களை சந்தித்தாலும் அவர் பின்வாங்கவில்லை. யாருக்கும் அஞ்சாமல் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பக்கம் நின்றார்.

விஜயகாந்த் அவர்களின் மறைவால் தமிழ் சினிமாவும், அரசியலும் இருண்டது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT