Wednesday, October 28, 2026

விஜயகாந்தின் மரண செய்தியை கேட்டு சூப்பர் ஸ்டார் உடனே செய்த காரியம்! மிகுந்த வேதனையில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர் விஜயகாந்த் இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு 78 வயது.

விஜயகாந்தின் உடல்நலம் கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

ADVERTISEMENT

விஜயகாந்தின் மறைவு தமிழ்த் திரையுலகம், அரசியல் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் மறைவு செய்தியை அறிந்ததும், நாகர்கோயிலில் நடைபெற்று வந்த வேட்டையன் படப்பிடிப்பை உடனே நிறுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த அங்கிருந்து சென்னை புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜயகாந்தும், ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் இருவர். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ரஜினிகாந்த் அவருக்கு பிரார்த்தனை செய்து பதிவிட்டு இருந்தார்.

விஜயகாந்தின் மறைவு ரஜினிகாந்திற்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அவரது அஞ்சலி செலுத்த உடனடியாக சென்னை புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT