Wednesday, October 28, 2026

இனிமேல் இப்படித்தான் விஜய்சேதுபதி எடுத்த அதிரடி முடிவு

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி பேசியதாவது:

ADVERTISEMENT

தொடர்ந்து வில்லனாக நடித்தால் மார்க்கெட் போய்விடும் என்கிற பயம் இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 20 படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்.
ஒரு படத்தை எந்த மாயமோ, மந்திரமோ போட்டு மக்களை படம் பார்த்துவிட வைத்துவிட முடியாது. கடுமையான உழைப்பு அதற்கான ஆர்வம் இருந்தால் மட்டும் தான் அது திரையில் தெரியும்.
இந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை, இந்தியை திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.
மெரி கிறிஸ்துமஸ் படத்தில் காத்ரினா கைஃப்புடனான முத்தக்காட்சி குறித்து என்ன சொல்வது என்று திகைத்துப்போனேன். இந்த படத்தில் நான் காத்ரினா கூட நடிப்பதே ஆச்சரியம் தான். எங்க ரெண்டு பேரையும் ஜோடியா என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
கத்ரீனா கைஃப் பேசியதாவது:

இயக்குநர் ஸ்ரீராம் ராகவனுடன் பணியாற்றியதால் எனது கனவு நினைவானது.
தனித்துவமிக்க இயக்குநரான ஸ்ரீராம் ராகவனின் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவது வேறு ஓர் உலகத்தில் நுழைந்ததைப் போலவே இருக்கும்.
இரண்டு மொழி படங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக எனக்கு இருக்கும்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் விஜய் சேதுபதியின் இரண்டு பதிலைகள் குறித்து அதிகம் பேசப்பட்டது. முதலாவது, தொடர்ந்து வில்லனாக நடித்தால் மார்க்கெட் போய்விடும் என்கிற பயம் இருப்பதாக கூறியது. இரண்டாவதாக, இந்தி திணிப்பு குறித்து கடுமையான கருத்தை தெரிவித்தது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT