Wednesday, October 28, 2026

பக்கவாதம் எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வது எப்படி?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் போது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. மாரடைப்பு பற்றி பலருக்கு தெரிந்திருந்தாலும், பக்கவாதம் பற்றி பலருக்கு தெரியாது.

பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது ஏற்படும் ஒரு தீவிரமான நிலையாகும். இதனால், மூளை செயல்பட தேவையான ஆற்றல் இல்லாமல், மூளையில் உள்ள செல்கள் மற்றும் தசைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இது நீடித்த மூளை பாதிப்பு, நீண்டகால இயலாமை அல்லது மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.

ADVERTISEMENT

பக்கவாதத்தின் அறிகுறிகள் லேசான பலவீனம் முதல் உடலின் ஒரு பக்கத்தில் உணர்வின்மை வரை இருக்கலாம். பக்கவாதத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம்.

சமீபத்திய ஆய்வுகளின்படி, பக்கவாதம் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே 7 எச்சரிக்கை அறிகுறிகள் உடலில் தெரியும். இந்த அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பக்கவாதத்தின் 7 எச்சரிக்கை அறிகுறிகள்:

அசாதாரண உணர்வின்மை அல்லது பலவீனம்: உடலின் ஒரு பகுதி, அதாவது முகம், கை அல்லது கால் போன்றவை ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டிருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

பேசுவதில் சிரமம்: திடீரென்று பேசுவதில் சிரமம் அல்லது வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாமல் வாய் குளறுவது பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

மங்கலான பார்வை: காரணமின்றி பார்வை மங்கலாவது அல்லது பார்க்கும் பொருட்கள் இரண்டாக தெரிவது பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம். தலைச்சுற்றல்: அடிக்கடி தலை சுற்றுவது அல்லது தடுமாற்றம் போன்றவை பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். நடக்க முடியாமை: திடீரென்று நடக்க முடியாமல் போவது அல்லது அடிக்கடி தடுக்கி விழுவது பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்.மிகுதியான உடல் சோர்வு: வழக்கத்திற்கு மாறாக மிகுதியாக உடல் சோர்வு அல்லது உடல் பலவீனத்தை உணர்வது பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT