நமது உடலில் மிகக் குறைந்த கவனிப்பைப் பெறும் பாகம் நமது கால் பாதம். பித்த வெடிப்பு வரும் வரை கால்களுக்கும் கவனம் தேவை என்பதை நாம் உணர்வதில்லை.
பாத வெடிப்பு என்பது பாதத்தின் தோல் வறண்டு, வெடித்து, சில சமயங்களில் ரத்தமும் கசிய கூடும். வலியும் மிகுதியாக இருக்கும். இது உடலில் சூடு மற்றும் பித்தம் அதிகம் உள்ளவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள், வேலையின் காரணமாக நீண்ட நேரம் நிற்பவர்கள், அழுக்கான பகுதிகளில் காலனி இல்லாமல் வேலை செய்பவர்கள் போன்றோரில் அதிகமாக காணப்படுகிறது.
பாத வெடிப்பைத் தடுக்க சில வழிகள்:
தினமும் காலையிலும், இரவிலும் பாதங்களை நன்றாக கழுவி மாயிஸ்ட்சரைசர் தேய்த்து வாருங்கள்.
பெட்ரோலியம் ஜெல்லி, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
தினமும் இரவில் கால்களை மிதமான சூட்டில் இருக்கும் நீரில் ஊற வைக்கவும்.
நீர்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
எடை அதிகம் உள்ளவர்கள் அதனைக் குறைக்க முயற்சி செய்யவும்.
சர்க்கரை நோயாளிகளும் தனது பாத பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்க்கவும்.
நகங்களை வெட்டி பாதங்களை தூய்மையாக வைத்திருங்கள்.
பாத வெடிப்பு அதிகமாகும் போது மருத்துவரின் பரிந்துரைப்படி களிம்புகளைப் பயன்படுத்தவும். நீரிழிவு நோயாளிகள் லேசாக பித்த வெடிப்பு வந்தவுடனேயே மருத்துவரை அணுகுவது நல்லது.
பாத வெடிப்பைத் தடுக்க சில எளிய வழிகள். இவற்றை பின்பற்றினால், பாத வெடிப்பிலிருந்து விடுபடலாம்.
