Wednesday, October 28, 2026

ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வலம்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

ஆப்பிரிக்காவில் படகு விபத்து 58 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் எம்போகோ ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்...

லாரி ஸ்டிரைக்! சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

தஞ்சை பாரத் பிளாண்ட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலிண்டர் லோடு இறக்கு கூலியாக...

அரசியல்வாதியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

முன்னாள் அமைச்சரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் வயது மூப்பு காரணமாக...

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக் குறைவால் மரணம்

சென்னை, ஏப்ரல் 6: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி, உடல்நலக்...
ADVERTISEMENT

கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம், மார்ச் 4-ம் தேதி வரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வலம் வர உள்ளது.

மேலும், மார்ச் 8-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா, திருச்சி உட்பட 8 இடங்களில் நேரலை ஒளிப்பரப்புடன் கொண்டாடப்பட உள்ளது.

ADVERTISEMENT

பத்திரிகையாளர் சந்திப்பு:

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.

தென் கைலாய பக்தி பேரவை:

தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் திரு. ராஜ் பிரகாஷ், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது:

ஆதியோகி ரத யாத்திரை ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களை அழைக்கும் விதமாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு ரத யாத்திரை ஜனவரி 5-ம் தேதி கோவையில் தொடங்கியது.
4 ரதங்கள் 60 நாட்களில் 35,000 கி.மீ தூரம் பயணிக்கும்.
ஒரு ரதம் பிப்ரவரி 22-ம் தேதி ஜெயங்கொண்டம், 23-25ம் தேதி கும்பகோணம், 26ம் தேதி தஞ்சாவூர், 27 & 28ம் தேதி அரியலூர், 29ம் தேதி பெரம்பலூர், மார்ச் 1ம் தேதி முசிறி, 2ம் தேதி குளித்தலை வழியாக மார்ச் 3 & 4ம் தேதி திருச்சி நகரில் வலம் வரும்.
கோவைக்கு வர முடியாதவர்கள் தங்கள் ஊரிலேயே ஆதியோகியை தரிசிக்கலாம்.
மஹா சிவராத்திரி விழா நேரலை ஒளிப்பரப்பு:

இந்தாண்டு, கோவை தவிர 36 இடங்களில் மஹாசிவராத்திரி விழா நேரலை ஒளிப்பரப்பு மூலம் கொண்டாடப்படும்.
திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தாஜ் திருமண மண்டபம் மற்றும் பெல் பகுதியில் உள்ள வி.எம். மஹாலில் மார்ச் 8ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படும்.
கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மயிலாடுதுறை, அரியலூர், நெய்வேலி ஆகிய ஊர்களிலும் விழா கொண்டாடப்படும்.
அனைத்து இடங்களிலும் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்படும்.
விழாவில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்.
பங்கேற்பாளர்கள்:

பத்திரிகையாளர் சந்திப்பில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் திரு.சந்திரன் மற்றும் திரு.சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT