பட்ஜெட் அறிவிப்புகள்:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே மற்றும் வங்கி பணி தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற, 1000 மாணவர்களுக்கு 6 மாத கால பயிற்சி வழங்கப்படும்.
சென்னை, கோவை, மதுரையில் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய தரமான பயிற்சி வழங்கப்படும்.
இதற்காக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தற்போதுள்ள திட்டங்கள்:
ஒன்றிய குடிமைப்பணித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்துக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டம்:
உலகை வெல்லும் இளைய தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திட்டம்.
இதுவரை சுமார் 28 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
18,000 பொறியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும், 20,000 கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில் 1.19 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
புதிய திறன் பயிற்சிக் கட்டமைப்புகள்:
தமிழ்நாட்டில் 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திறன் பயிற்சிக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
இந்த அறிவிப்புகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்புகளை பெற பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
