Wednesday, October 28, 2026

விஷாலின் ரத்னம் படத்தில் 5 நிமிட ஒரே ஷாட்டில் சண்டை காட்சி!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ரத்னம். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், நடிகர் விஷால் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், விஷாலை வரவேற்கும் இயக்குனர் ஹரி, ஸ்டண்ட் மாஸ்டர் உங்களை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். என்ன என்று போய் கேளுங்கள் என சொல்லி அனுப்புகிறார். இதனையடுத்து விஷால் பைட் மாஸ்டர் கனல் கண்ணனை போய் பார்க்கும் போது, ஒரே ஷாட்டில் ஐந்து நிமிடம் சண்டைக் காட்சியை எடுக்க போகிறோம் என்று கூறுகிறார்.

ADVERTISEMENT

அதற்கு ஒரு ஷாட்டில் ஐந்து நிமிடம் சண்டைக் காட்சியா? என்று அவர் கேட்கும்போது, சண்டை காட்சி மட்டும் அல்ல சேஸிங் காட்சியும் உண்டு என்று கூறுகிறார். அதைக்கேட்டு ஆச்சர்யத்துடன் செல்கிறார் விஷால். அப்போது கனல்கண்ணன் 24 வருஷமா எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே என்று கூறிக் கொண்டு நிற்கிறார்.

இப்படி இந்த ரத்னம் படத்தில் ஒரு காட்சி இடம் பெறுவதை இந்த வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார் விஷால். இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஷால் மற்றும் கனல்கண்ணன் இணைந்து நடித்த சண்டைக் காட்சிகள் ஏற்கனவே பல படங்களில் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்த ரத்னம் படத்தில் இடம்பெறும் 5 நிமிட ஒரே ஷாட்டில் சண்டை காட்சியும் வெற்றிபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சமுத்திரக்கனி, யோகி பாபு, கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT