Wednesday, October 28, 2026

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறுகிறது

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

மாலத்தீவு அதிபர் முகமது முய்சின் உத்தரவின் பேரில், மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் மார்ச் 15ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்திய ராணுவம் மாலத்தீவில் 1988 ஆம் ஆண்டு முதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாலத்தீவு கடற்பரப்பில் உள்ள பயங்கரவாத மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கவும், மாலத்தீவு கடற்படையின் திறனை மேம்படுத்தவும் இந்திய ராணுவம் உதவுகிறது.

ADVERTISEMENT

ஆனால், சமீப காலமாக மாலத்தீவு அரசு இந்தியாவின் மீது கடும் அதிருப்தியில் உள்ளது. பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கேலி, விமர்சனம் செய்தனர். இதனால், அந்நாட்டிற்கு இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்வோர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இச்சூழ்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவிற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பினார். இதற்கு பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில், “மாலத்தீவு சிறிய நாடாக இருந்தாலும், மற்ற நாடுகள் கொடுமைப்படுத்துவதற்கு எந்த நாட்டிற்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை” என்று கூறியிருந்தார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து, மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் மார்ச் 15ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு கெடு விதித்துள்ளது.

அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், “இந்திய ராணுவத்தினர் மாலத்தீவில் இருக்க முடியாது. இது அதிபர் முகமது முய்சி மற்றும் நிர்வாகத்தின் கொள்கை முடிவு” என்றனர்.

மாலத்தீவில் தற்போது 88 இந்திய ராணுவ வீரர்கள் உள்ளனர். சீனாவின் ஆதரவாளராக முகமது முய்சு, “மாலத்தீவில் இருந்து இந்தியாவை வெளியேற்றுவோம்” என தீவிர பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கை இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான உறவுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT