Wednesday, October 28, 2026

வாங்க மன்மதராஜா என பாசத்தோடு அழைத்த கலைஞர் 100 விழாவில் தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்யம்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகிற்கு முத்தமிழ் கலைஞர் கருணாநிதி ஆற்றிய பெரும் தொண்டை கருத்தில் கொண்டு அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா நேற்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, நயன்தாரா, இயக்குநர் வெற்றிமாறன், கார்த்தி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கலைஞரின் அருமை பெருமைகளை பற்றி பேசி புகழாரம் சூட்டினார்கள்.

ADVERTISEMENT

தனுஷ் பேச்சு

நடிகர் தனுஷ் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா அவர்களின் இந்த நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை. அவரை நான் ஒரு படத்தின் பூஜையின்போது தான் சந்தித்தேன். அப்போது அவர் என்னை பார்த்து ‘வாங்க மன்மதராஜா’ என என்னை அழைத்தார்.

அவரின் மறைவை பற்றி பேசினால் தான் அவர் மறைந்து விட்டார் என்பதே நினைவுக்கு வருகிறது. அது வரையில் அவர் இருப்பதாக தான் நான் நினைக்கிறேன். கலியன் பூங்குன்றனார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என சொன்னார். அதற்கு பிறகு கலைஞர் ‘நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்’. நாமாக வாழ்ந்தால் தான் நலமாக வாழ முடியும் என்று சொன்னவர் கலைஞர்.

கலைஞரை போலவே நம்முடைய முதல்வரும் மிகவும் எளிமையானவராக, எந்நேரமும் அணுக கூடியவராக நம்மில் ஒருவராக இருப்பதை பார்க்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய அசுரன் படத்தை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து வாழ்த்தினார். அப்போது அவர் என்னை பிரதர் என அழைத்தார். அவரின் அந்த எதார்த்தமான அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்தது” என பேசி இருந்தார் தனுஷ்.

திரையுலகின் அன்பு

கலைஞர் கருணாநிதி தமிழ் திரையுலகின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவரின் ஆதரவுடன்தான் தமிழ் சினிமா உலகம் உயர்ந்த நிலையை அடைந்தது. கலைஞரை நினைவுகூரும் விதமாக இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்கள் பங்கை ஆற்றினார்கள்.

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, நயன்தாரா, இயக்குநர் வெற்றிமாறன், கார்த்தி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலைஞரின் புகழ் பாடினார்கள். அவர்களின் பேச்சுகளில் கலைஞர் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பும், மரியாதையுமே வெளிப்பட்டது.

கலைஞர் புகழ் வாழ்க

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா திரையுலகில் ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்தது. இந்த விழா மூலம் கலைஞரின் புகழ் இன்னும் பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT