Wednesday, October 28, 2026

பிரம்மாண்டத்தின் உச்சம் 1000-கோடியில் அஜித்தின் அடுத்த படம் ! பிரசாந்த் நீல் எடுத்த அதிரடி முடிவு

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார், தனது அடுத்தடுத்த படங்களுக்கான இயக்குநர்களை தேர்வு செய்து வருகிறார். விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்க, ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். ஏகே 64 படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இரண்டு படங்களை விடவும் ஏகே 65 படம் தான் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்போதும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் வெளியாகி மரண மாஸ் ஹிட் கொடுத்துள்ளது. ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா படமாக வெளியான சலார், முதல் நாளில் 175 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இதனையடுத்து ஜூனியர் என்.டி.ஆரின் NTR31 படத்தை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல். ஆனால் அதன் பின்னர் பிரசாந்த் நீல் இயக்கும் படம் குறித்து இதுவரை அப்டேட் வெளியாகவில்லை.கேஜிஎஃப் 3, சலார் இரண்டாம் பாகம் என பிரசாந்த் நீல் லைன்-அப் பெரிதாக இருந்தாலும், கமல்ஹாசனுடன் இணையலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அஜித்துடன் இணைய முடிவு செய்துள்ளாராம் பிரசாந்த் நீல். அதன்படி அஜித்தின் ஏகே 65 படத்தை பிரசாந்த் நீல் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை அஜித் – பிரசாந்த் நீல் இணைந்தால் கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை ஏகே 65 பிரேக் செய்யும் என இப்போதே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆனாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இப்போதைக்கு வெளியாகுமா எனத் தெரியவில்லை.

இந்த கூட்டணி உறுதிப்பட்டால், கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை ஏகே 65 பிரேக் செய்யும் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணி வெற்றிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி மூலம் தமிழ் சினிமாவில் புதிய சாதனைகள் படைக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT