சென்னை: தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 13) அறிவித்தார்.
இதன்படி,
தமிழ்நாட்டின் தலைசிறந்த தமிழ் அறிஞருக்கு வழங்கப்படும் திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கப்படுகிறது.
தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டில் சிறந்து விளங்கியவருக்கு வழங்கப்படும் பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவம் அவர்களுக்கும்,
சமூக நீதி மற்றும் சமூக சீர்திருத்தப் பணியில் சிறந்து விளங்கியவருக்கு வழங்கப்படும் பெருந்தலைவர் காமராசர் விருது உ.பலராமன் அவர்களுக்கும்,
தமிழின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்தவருக்கு வழங்கப்படும் மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதி அவர்களுக்கும்,
தமிழின் புரட்சிகர இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்தவருக்கு வழங்கப்படும் பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் முத்தரசு அவர்களுக்கும்,
தமிழின் சமூக, அரசியல், பண்பாட்டுப் போராட்டங்களில் சிறப்பான பங்களிப்பு செய்தவருக்கு வழங்கப்படும் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது ஜெயசீல ஸ்டீபன் அவர்களுக்கும்,
தமிழின் இலக்கிய, கலை, பண்பாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்தவருக்கு வழங்கப்படும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது முனைவர் இரா.கருணாநிதி அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த விருதுகள் தமிழ்நாட்டின் பண்பாடு, சமூகம் மற்றும் இலக்கியத்திற்கு பெருமை சேர்க்கும் என்று அவர் கூறினார்.
