Wednesday, October 28, 2026

விடாமுயற்சி படத்தில் அஜித்தை மிரட்ட களமிறங்கிய பாலிவுட் நடிகர் ! AK வுக்கு நிகரான நடிகர் !வைரலாகும் புகைப்படம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித்குமார் தனது புதிய படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை அக்டோபரில் அஜர்பைஜானில் தொடங்கினார். ஒரு அட்டவணை முடிந்து சமீபத்தில் சென்னை திரும்பினார். இப்போது, டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் அடுத்த ஷெட்யூலுக்காக ஏகே மற்றும் படக் குழு மீண்டும் அஜர்பைஜானுக்குச் செல்வதாகக் கேள்விப்படுகிறோம்.70 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படம் ஒரு ரோட்-ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் குமார் ஸ்டைலான சேஸிங் சீக்வென்ஸில் நடிப்பதாக கூறப்படுகிறது. 2024 ஜனவரி இறுதிக்குள் முழு படப்பிடிப்பையும் முடித்து தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். முதன்முறையாக அஜித்துடன் மகிழ் திருமேனி இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை ஏகே ரசிகர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவரான அஜித்குமார் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. எப்போதும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித்குமார் தன்னுடைய 62ஆவது படத்தில் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே கமிட்டானார். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு திருப்தி இல்லாததால் அதிலிருந்து வெளியேறினார்.

ADVERTISEMENT

விடாமுயற்சி: விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித் 62அவது படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டானார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி; அதற்கு பிறகு வேறு எந்த அப்டேட்டும் இதுவரை படத்திலிருந்து வெளியாகவில்லை. ஆகினும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தை விரைவில் முடித்து இந்த வருட கோடை விடுமுறைக்கோ அல்லது தீபாவளிக்கோ ரிலீஸ் செய்ய மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதற்காக மும்முரமாக உழைத்து வருகிறார்.

அடுத்த லொக்கேஷன்: அஜித்தும் மும்முரமாக நடித்துவந்த சூழலில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்ததோடு புதிய லொக்கேஷன் தேடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னையில் செட் போட்டு நடக்கும் இல்லையென்றால் வேறு மாநிலத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன கதை? விடாமுயற்சி படத்துடைய கதையின் ஒன்லைன் இதுதான் என்றும் ரசிகர்கள் சிலர் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதன்படி அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவி. அவர்கள் இருவரும் ஒரு பணி நிமித்தமாக வெளிநாடு செல்கின்றனர். அப்போது திரிஷாவை வில்லன் குரூப் கடத்திவிடுகிறது. அவர்களிடமிருந்து திரிஷாவை எப்படி மீட்கிறார் என்பதுதான் அது என ஒருதரப்பினர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. லைன் சாதாரணமாக இருந்தாலும் கண்டிப்பாக மகிழ் திருமேனி திரைக்கதையில் மேஜிக் செய்துவிடுவார் என்ற கருத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்: படம் பக்கா ஆக்‌ஷன் காட்சிகளோடு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனியும் ஆக்‌ஷன் காட்சிகளை எடுப்பதில் கில்லி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகத்தலைவன் திரைப்படத்தி க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சிகூட அட்டகாசமாக இருந்ததாக ரசிகர்கள் கூறினர். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் கார் ஒன்று ஒரு பக்கம் சாய்ந்தவாறு சென்றுகொண்டிருக்கிறது. அநேகமாக இந்தப் புகைப்படம் அஜர்பைஜான் ஷெட்யூலில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

அஜித் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘விடாமுயற்சி’ படம் துவங்கியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் ஷுட்டிங் எப்போது துவங்கும் என்பதற்காக ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்து வந்தனர். இதனையடுத்து ஒரு வழியாக அண்மையில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கியது. இந்நிலையில் இப்படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

அஜித் நடிப்பில் கடைசியாக ‘துணிவு’ படம் ரிலீசாகி இருந்தது. எச். வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்து வெளியானது இப்படம். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதனால் ரசிகர்கள் குஷியானார்கள்.

ஆனாலும் இப்படம் துவங்குவது தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இதனையடுத்து இயக்குனர் மாற்றப்பட்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படம் உருவாவதாக கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியானது. அதோடு இப்படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் கடுமையாக அப்செட் ஆனார்கள்.

இந்நிலையில் அண்மையில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கியது. ஆனால் இதுக்குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. தற்போது அங்கு படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ஷுட்டிங்கில் அஜித், திரிஷா, பிக்பாஸ் பிரபலமான ஆரவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. அதன்படி ‘விடாமுயற்சி’ படத்தில் ஒரு பிளாஸ்பேக் காட்சி உள்ளதாம். இதில் மிகவும் இளமையாக தெரிவதற்காக உடல் எடையை குறைக்கும் வேலையில் திரிஷா இறங்கியுள்ளாராம். ஏற்கனவே ஒல்லியாக இருக்கும் திரிஷா, மேலும் உடல் எடையை குறைப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடிக்கிறார், த்ரிஷா, சஞ்சய் தத், அருண் விஜய், அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் ஆக்ஷன் கிங் சஞ்சய் தாத் உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT