சென்னை: பிரபல மராத்தி நடிகர் ஷாயாஜி ஷிண்டே நேற்று திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஷாயாஜி ஷிண்டேவின் இதயத்திற்கு ரத்த ஓட்டம் செல்லும் பாதையில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
ADVERTISEMENT
இதையடுத்து, அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது ஷாயாஜி ஷிண்டேவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஷாயாஜி ஷிண்டே தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
