Wednesday, October 28, 2026

முடவாட்டுக்கால்: மூட்டு வலிக்கு ஓர் அற்புத தீர்வு!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

முடவாட்டுக்கால், மலைப்பகுதிகளில் விளையும் ஒரு அரிய மூலிகை. எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அருமருந்தாக விளங்கும் இதன் மருத்துவ குணங்கள் பற்றிய ஒரு பார்வை.

முடவாட்டுக்கால் எங்கே கிடைக்கும்?

ADVERTISEMENT

இந்தியாவில், கொல்லிமலை மற்றும் ஏற்காடு போன்ற மலைப்பகுதிகளில் முடவாட்டுக்கால் அதிகம் கிடைக்கிறது.

முடவாட்டுக்காலின் மருத்துவ குணங்கள்:

எலும்புகளுக்கு பலத்தை கொடுத்து கால்களை உறுதியாக்குகிறது.
மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது.
எலும்பு மூட்டுகளுக்கு இடையே உள்ள மஜ்ஜையை வளர்க்க உதவுகிறது.
ஆர்தரைட்டிஸ் போன்ற நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது.
வாதம், பித்தம், கபம் போன்ற நோய்களை விரட்ட உதவுகிறது.
முடவாட்டுக்கால் சூப் செய்முறை:

தேவையான பொருட்கள்:

முடவாட்டுக்கால் – 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 5 டீஸ்பூன்
மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 3 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – பொடியாக நறுக்கியது அரை கப்
தக்காளி – பொடியாக நறுக்கியது அரை கப்
இலவங்கப்பட்டை – சிறு துண்டு
பூண்டு – 3 பல்
உப்பு, மிளகுத்தூள், நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:

முடவாட்டுக்காலை நன்றாக கழுவி சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக வெட்டவும்.
இஞ்சி, பூண்டு, கசகசா, தேங்காய்த்துருவல் சேர்த்து மைய அரைக்கவும்.
சின்ன வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு இலவங்கப்பட்டை சேர்த்து வதக்கவும்.
சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
முடவாட்டுக்கால், அரைத்த மசாலா சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு கொதிக்க விடவும்.
20 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, பூண்டு தட்டி சேர்க்கவும்.
உப்பு, மிளகுத்தூள் தூவி டம்ளரில் விட்டு குடிக்கவும்.
முடவாட்டுக்காலின் பயன்கள்:

முடக்குவாதம், மூட்டுவலிக்கு சிறந்த தீர்வு.
குழந்தைகளுக்கு வாதம் தாக்கினால் குளிக்க வைக்கலாம்.
கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும்.
மூட்டு வலி, தசைபிடிப்பு போன்றவற்றை சரிசெய்யும்.
முடவாட்டுக்கால் சூப் எடுத்துக்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படாது. இளவயதிலேயே மூட்டு வலி வரும்வர்கள் முடவாட்டுக்கால் சூப் எடுத்துகொள்வதன் மூலம் வலியை தடுக்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT