நுரையீரல் அழற்சி காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி உயிரிழந்தார் நடிகர், அரசியல்வாதி கேப்டன் விஜயகாந்த். அவரது மறைவு தமிழ் சினிமா மற்றும் அரசியல் துறைகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கேப்டன் விஜயகாந்த் இறந்து ஒரு மாத காலம் ஆகிய நிலையில், நடிகர் சிலம்பரசன் இன்று (ஜனவரி 27) சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் இல்லத்திற்கு வருகை தந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் கேப்டனின் மனைவி பிரேமலதா மற்றும் இரு மகன்களிடம் ஆறுதல் கூறினார். சிலம்பரசன் வருகையால் விஜயகாந்த் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு, அவரது இல்லத்திற்கு பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். நடிகர் சிலம்பரசன் வருகை இன்னும் ஒரு முக்கியத்துவத்தை அளித்துள்ளது.
