Wednesday, October 28, 2026

அஜித் என்ற ஒரு பெயருக்கே அதிர்ந்த அரங்கம் !ரஜினி கொடுத்த ரியாக்ஷன்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லால்சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், விஜய் பற்றி பேசியபோது, “விஜய் என் கண் முன்னால் வளர்ந்த பையன். அவரை எப்படி போட்டியாக பார்க்க முடியும்? அப்படி நினைத்தால் அது எனக்கு மரியாதையாக இருக்காது. என்னையும் அவர் போட்டியாக நினைத்தால் அவருக்கும் அது மரியாதையாக இருக்காது. நம் இருவரும் நடிகர்கள் என்பதை தாண்டி, நண்பர்கள் என்பதே முக்கியம். எப்போதும் நல்ல நண்பர்களாக இருப்போம்” என்று கூறினார்.

ADVERTISEMENT

ரஜினியின் இந்த பேச்சு, விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், ரஜினி – விஜய் இடையே நீண்ட காலமாக இருந்து வந்த பனிப்போர் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

இந்த விழாவில் பேசிய விஷ்ணு விஷால், “தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் யார் உங்களுக்கு கோச்சாக வந்தால் நன்றாக இருக்கும்?” என்ற கேள்விக்கு, “அஜித்” என்று பதிலளித்தார். அஜித் பெயரைக் கேட்டதும், அரங்கமே ஆரவாரத்துடன் நிறைந்தது.

விஷ்ணு விஷால் மேலும் கூறுகையில், “அஜித் மிகவும் டீசண்டாக அமைதியாக இருந்து வேலை வாங்குவார். அதனால் அவர் இருந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT