நடிகர் விஷால் தங்களுக்கு கடன் செலுத்தவில்லை எனக் கூறி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், தன் மீது லைகா நிறுவனம் அவதூறு பரப்புவதாக நடிகர் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. லைகா நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் கடன் நிலுவையில் இல்லை என்றும், தான் கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனக்கூறி தனக்கு எதிராக லைகா அவதூறு பரப்புவதாகவும் நடிகர் விஷால் தெரிவித்தார்.
மேலும், தன்னுடைய பட வாய்ப்புகளை லைகா நிறுவனம் தடுக்க முயற்சிப்பதாகவும், தனக்கும் லைகா நிறுவனத்தும் இடையே நடந்த பணப்பரிவர்த்தனை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த வழக்கில், நடிகர் விஷால் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அவருக்கு எதிராக லைகா நிறுவனம் நடவடிக்கை எடுக்கலாம்.
